search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி வியாபாரி"

    • தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று அருணாச்சலத்திற்கும், திருமன்னாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • அருணாச்சலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்னும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில் :

    கோட்டாறு வடலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் திருமன்னார் (வயது 65). ஈத்தாமொழி செம்பொன் கரை பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 63) .

    இவர்கள் இருவரும் கோட்டாறு பகுதியில் அரிசி கடை வைத்துள்ளனர். இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று அருணாச்சலத்திற்கும், திருமன்னாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அருணாச்சலம் அரிவாளால் திருமன்னாரை முதுகு,தோள்பட்டை, கை பகுதியில் சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அருணாச்சலத்திற்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

    உடனே அருணாச்சலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்னும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரிசி வியாபாரி மனைவியிடம் 7 பவுன் செயின் பறிப்பு
    • கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், அரிசி வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 50). இவர் இரவு திண்டுக்கல் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது.

    அதில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது தொடர்பாக விஜயலட்சுமி, கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கோவை அரிசி வியாபாரியிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் கோகுல் யாதவ்(வயது 45). இவர் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரிடம் சுங்கம் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார்(43), இவரது தம்பி ரமேஷ்குமார் ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.63 லட்சத்து 77 ஆயிரத்து 475-க்கு அரிசி மூட்டை வாங்கி உள்ளனர்.

    ஒரு மாதத்தில் அரிசிக்குரிய பணத்தை தந்து விடுவதாக கூறி உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கோகுல் யாதவ் தொடர்ந்து பணம் கேட்டார். அப்போது சுரேஷ்குமாரும், ரமேஷ்குமாரும் சேர்ந்து ரூ.55 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளனர். அந்த காசோலையில் கையெழுத்து சரியாக இல்லை என வங்கி ஊழியர்கள் வாங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார், ரமேஷ்கு மாரை தொடர்பு கொண்டு கோகுல் யாதவ் பணத்தை கேட்டார். அப்போது இருவரும் அவரை மிரட்டி உள்ளனர். இதுகுறித்து கோகுல் யாதவ் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சுரேஷ்குமார், ரமேஷ் குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டார். ரமேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
    ×